மேலும் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
22-Nov-2024
புதுச்சேரி: புதுச்சேரி புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஆனந்துக்கு வரவேற்பு விழா மற்றும் மாற்றலாகி சென்ற நீதிபதி சந்திரசேகரனுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணகுமார் வரவேற்றார்.விழாவில், சங்கத்தின் சார்பாக மாற்றலாகிச் செல் லும் தலைமை நீதிபதி சந்திரசேகரனுக்கு நினைவு பரிசும், புதிதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதி ஆனந்துக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்பும் அளிக்கப்பட்டது.சங்க துணைத் தலைவி இந்துமதி புவனேஸ்வரர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொருளாளர் ராஜபிரகாஷ், இணைச் செயலாளர் ராஜேஷ், மதன், செயற்குழு உறுப்பினர்கள் பிரமிளா, புவனேஸ்வரி கண்ணதாசன் ஆகியோர் செய்திருந்தனர்.நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Nov-2024