மேலும் செய்திகள்
தவறி விழுந்த முதியவர் பலி
26-Jul-2026
மயங்கி விழுந்து முதியவர் சாவு
19-Jul-2026
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் முட்டை தோசை சாப்பிட்ட வெல்டர் மயங்கி விழுந்து இறந்தார். லாஸ்பேட்டை, சாமிபிள்ளைதோட்டம், லெனின் நகரைச் சேர்ந்தவர் பிரசாத், 36; வெல்டர். இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பிரசாத் ஆகஸ்ட் 17 இரவு 9:45 மணிக்கு வீட்டில் முட்டை தோசை சாப்பிட்டு படுக்க சென்றார். பின், சிறிது நேரம் கழித்து, பிரசாத் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியபடி மயங்கி விழுத்தார். இதையடுத்து, மனைவி லதா மற்றும் உறவினர்கள் பிரசாத்தை மீட்டு ஆட்டோ மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பிரசாத்தை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Jul-2026
19-Jul-2026