உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

 முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெல்பேஜ் இந்தியா மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து, முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நெட்டப்பாக்கம் சமுதாயக்கூடத்தில் நடந்தது. புதுச்சேரி முதியோர் நலக் கூட்டமைப்பு பொருளாளர் சதாசிவம் வரவேற்றார். அலிமிகோ நிறுவன நிர்வாகி நாயக், ஹெல்பேஜ் இந்தியா இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பளராக நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஹெலன் பங்கேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் தயாநிதி, மனிகண்டன் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 72 முதியோர்களுக்கு நகர்வுத் திறனை மேம்படுத்தும் பல்வேறு உதவி சாதனங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பணியாளர் அகிலா செய்திருந்தார். நெட்டப்பாக்கம் கிராம முதியோர் நல கூட்டமைப்பின் தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை