உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மகளிர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 மகளிர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரி: பாண்டுரங்கன் அறக்கட்டளை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், ரவி பாண்டுரங்கன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அரியாங்குப்பம் ஏ.வி.ஆர்., திருமண மஹாலில், பாண்டுரங்கன் அறக்கட்டளை சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு, ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கி, மகளிர் தின விழா குறித்து பேசினார். தொடர்ந்து, 1,200 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரவி பாண்டுரங்கன் வழங்கினார். விழாவில் அரியாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை