உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்துகள் விவகாரம் :வெள்ளை அறிக்கை வேண்டும்

 போலி மருந்துகள் விவகாரம் :வெள்ளை அறிக்கை வேண்டும்

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து விற்பனை செய்த கடையை இழுந்து மூடி மாத்திரைகளை ரோட்டில் கொட்டி, அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரியில் போலி மருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதில், போலி மருந்து எனக், கண்டறியப்பட்ட 32 வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் பட்டியலை, மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தடைசெய்யப்பட்ட மருந்துகள், புஸ்சி வீதியில் உள்ள 3 மருந்து கடைகளில் விற்கப்பட்டது. அதனை அறிந்த அ.தி.மு.க., வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், நேற்று காலை புஸ்சி வீதியில் உள்ள 3 மருந்து கடைகளில் முற்றுகையிட்டு, போலி மருந்து, மாத்திரைகளை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும், போலி மருந்து விற்பனை கண்டித்து மருந்து கடையின் கதவை பூட்டியதால் பரப்பு நிலவியது. அப்போது, அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், போலி மருந்து வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்ததில் புஸ்சி வீதியில் உள்ள மருந்து கடைகளில் போலி மருந்துகள் கண்டறிந்து, மருந்து விற்பனையை தடை செய்துள்ளனர். இக்கடையை, திறந்தவர்களிடம் மூடும்படி வலியுறுத்தினோம். சுகாதாரத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் இவ்விவகாரத்தில் மக்களுடைய பயத்தையும், சந்தேகத்தையும், போக்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ