உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயிலில் அடிப்பட்டு இறந்தவர் யார்?

ரயிலில் அடிப்பட்டு இறந்தவர் யார்?

புதுச்சேரி: வில்லியனுார் அருகே ரயிலில் அடிப்பட்டு இறந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் ரயில்வே கேட், தண்டவாளம் அருகில் 56 வயது மதிக்கதக்கவர் நேற்று (நவ.,5) மதியம் ரயிலில் அடிப்பட்டு பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் யார், எங்கிருந்து வந்தார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !