மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் மருத்துவமனையில் அனுமதி
18-Sep-2025
வில்லியனுார்: திருக்கனுார் அடுத்த குமாரபாளையம் கிராமத்தில் வினாயகர் கோவில் அருகே கடந்த 27 ம் தேதி காலை 11:30 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் லாரி மோதி இறந்தார். இவர் நீல நிற பூ போட்ட முழுக்கை சட்டை, நீல நிற வெள்ளை கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். இடது பகுதி வயிறு பகுதியில் காயவடு, இடது பக்க மார்பில் திரிசூலம், வலது பக்க மார்பில் மாலதி என பச்சை குத்தியுள்ளார். அவரது உடல் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரி சவக்கிடங்கில் உள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் 0413-2661246, நிலைய அதிகாரி 9443790759- 9994968058 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
18-Sep-2025