வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அக்டோபர் 27 இல் இம்முறை அபரிமிதமான மழை எதிர் பார்க்கிறோம். கனமழை மற்றும் புயல் காரணங்களால் எதிர் பார்க்கும் அளவு மக்கள் வர மாட்டார்கள்.
விக்கிரவாண்டி,: நடிகர் விஜய், துவங்கியுள்ள த.வெ.க., வின் மாநாடு தள்ளிப்போனதற்கான ருசிகர தகவல் தற்போது வௌியாகி உள்ளது.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 23ம் தேதி, விக்கிரவாண்டியில் நடத்த, கடந்த 8ம் தேதி 31 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி வழங்கியது.முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட நிலையில், கால அவகாசம் குறைவாக இருந்ததால், தொண்டர்களை திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.அதனையொட்டி, விஜய் ஆலோசனையின்படி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிளைகள் தோறும் கட்சி கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளை சந்தித்து, மாநாட்டிற்கு ஆதரவு திரட்டினார்.அதனைத் தொடர்ந்து கட்சியின் மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என விஜய் நேற்று அறிவித்தார்.அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், புஸ்சி ஆனந்த் தலைமையில், மாநாடு பணிகளை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 27 இல் இம்முறை அபரிமிதமான மழை எதிர் பார்க்கிறோம். கனமழை மற்றும் புயல் காரணங்களால் எதிர் பார்க்கும் அளவு மக்கள் வர மாட்டார்கள்.