மேலும் செய்திகள்
கணவர் மீது கோபம் மனைவி தற்கொலை
30-Jan-2026
புதுச்சேரி: கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் மனமுடைந்த மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிகரன், 30; கோவில் பூசாரி. முருங்கப்பாக்கத்தில் வாடகை வீட்டில், வசித்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவரது மனைவி சுகந்தி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Jan-2026