மேலும் செய்திகள்
விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
26-Nov-2024
புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், 9 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விமல், 42; இவரது மனைவி சுகந்தி, 37; மகள் ஜோஷிகா, 4; மூவரும் விமலின் தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர். பெயிண்டரான விமலுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த 3 மாதத்திற்கு முன்பு விமல் குடித்து விட்டு வந்ததால், மனைவி சுகந்தி கோபித்து கொண்டு சென்னை அடையாறு சென்று விட்டார். அவரது தந்தை சமாதானம் செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விட்டு சென்றார். கடந்த 20ம் தேதி மீண்டும் விமல் குடித்ததால் கோபித்து கொண்டு மகள் ஜோஷிகாவுடன் வெளியேறிய சுகந்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தாயும் மகளையும் தேடி வருகின்றனர்.
26-Nov-2024