மேலும் செய்திகள்
மனு அளிக்க வந்த காங்., தர்ணா
25-Dec-2024
காரைக்கால்: சவுதியில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு அவரது மனைவி துணை கலெக்டரிடம் மனு அளித்தர்.காரைக்கால் தோமாஸ் அருள்திடல் வீதியை சேர்ந்தவர் லுாயில் கிஸ்வர், 36. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் கடந்த 2023ம் ஆண்டு சவுதி நாட்டில் ஜித்தா பகுதிக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். அவர், தினசரி தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் மொபைல் போனில் பேசுவது வழக்கம். கடந்த பொங்கல் பண்டிகை முதல் நாள் 13ம் தேதி லுாயில் கிஸ்வர் மனைவி முத்துலட்சுமியிடம் பேசியுள்ளார்.மறுநாள் அவரை முத்துலட்சுமி தொடர்புகொண்ட போது எவ்வித தகவல் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நேற்று முன்தினம் லுாயில் கிஸ்வர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட போது, கடந்த 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு மாரடைப்பால் லுாயில் கிஸ்வர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக, அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் குடும்பத்தினர் காரைக்கால் துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர். அதில், சவுதி நாட்டில் உயிரிழந்த லுாயின் கிஸ்வர் உடலை இந்தியா கொண்டு வந்து எங்களது குடும்ப முறைபடி அடக்க செய்ய உரிய நடவடிக்கை எடுக்கம் வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.
25-Dec-2024