உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

புதுச்சேரி; மது குடித்ததை மனைவி கண்டித்ததால், கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை, உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம், 23; பெயிண்டர். நேற்று முன்தினம் அவர் மது குடித்து விட்டு, வீட்டுக்கு வந்ததை அவரது மனைவி தட்டிக் கேட்டார். இதில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அவரது மனைவி கோபித்து கொண்டு, உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டு அறையில், சண்முகம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி