உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி, கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் உத்திரவேல், 37; புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தவளக்குப்பத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி, பிரியதர்ஷினி, 27; அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்த பிரியர்ஷினி, கடந்த 27ம் தேதி மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, உத்திரவேல் அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ