உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேகத்தடைகளில் வர்ணம் அடிக்கப்படுமா?

 வேகத்தடைகளில் வர்ணம் அடிக்கப்படுமா?

நெட்டப்பாக்கம்: மடுகரை - தவளக்குப்பம் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மடுகரை - தவளக்குப்பம் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இந்த வழியாக புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பஸ், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் மடுகரையிலிருந்து - தவளக்குப்பம் வரையிலும், மடுகரை - வில்லியனுார் வரையிலும், 50க்கும் மேற்பட்ட வேகத் தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசவில்லை; வேகத்தடையை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகையோ, பிரதிப்பலிப்பானோ பொருத்தவில்லை. இதனால் இரவு நேரங்களில், வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியமால் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி, போக்குவரத்து மிகுந்த மடுகரை - தவளக்குப்பம், வில்லியனுார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் அடிக்க சம்மபந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ