உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பணி ஒருங்கிணைந்த தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

 அரசு பணி ஒருங்கிணைந்த தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பணி ஒருங்கிணைந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என இளைஞர்கள் எதிர்பார்த்துள்ளனர். புதுச்சேரி அரசின் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தேர்வு நடத்த உள்ளது. இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. இந்த விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 14ம் தேதி கடைசி நாள். இதன்பிறகு காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். ஒரே நேரத்தில் பலரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்றதால் சர்வர் வேலை செய்யவில்லை. அதோடு குருப் 'பி' பணியிடங்களுக்கு கடந்த காலத்தில் எம்.பி.சி ஒதுக்கீடு இல்லை. தற்போது எம்.பி.சி ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. என்றும் பலர் புகார் கூறி வருகின்றனர். மேலும் விண்ணப்பம் குறித்து சந்தேகங்களை தீர்க்க தொலைபேசி எண் அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டால் யாரும் எடுக்கவில்லை எனவும் புகார் வந்துள்ளது. இதனால் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிப்பு செய்து அவகாசம் அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி