உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு அதிகாரியை மிரட்டிய ரவுடிகளின் மனைவியர் கைது

அரசு அதிகாரியை மிரட்டிய ரவுடிகளின் மனைவியர் கைது

புதுச்சேரி:புதுச்சேரி, ஒதியஞ்சாலையை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், தனக்கு பழக்கமான பெண்ணை சந்திக்க, சில தினங்களுக்கு முன், ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றார்.அங்கு பதுங்கி இருந்த ஐந்து ரவுடிகள், அந்த அதிகாரியை மிரட்டி, 4 லட்சம் ரூபாயை பறித்தனர். மறுநாள் அவரை அழைத்துச் சென்ற பெண் மிரட்டியதால், 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.இந்நிலையில், அந்த கும்பல் மேலும், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால், அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ரெட்டியார்பாளையம் என்பதால், வழக்கு ரெட்டியார்பாளையம் போலீசுக்கு மாற்றப்பட்டது.அப்பெண்களை பிடித்து விசாரித்ததில், அரியாங்குப்பம், பழைய பூரணாங்குப்பத்தை சேர்ந்த டேவிட் மனைவி மணிமேகலை, 40, பெரம்பையை சேர்ந்த சுகந்தி, 28, வாணரப்பேட்டை தீனதயாளன் மனைவி சுலோக்ஷனா, 32, என்பதும், ரவுடிகளின் மனைவியர் என்பதும் தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 25, 2025 04:49

அங்கு போன அரசு அதிகாரியை வருமானவரித்துறையினர் இன்னமும் ரைடு செய்யாம வைத்திருப்பது ?


புதிய வீடியோ