உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகை திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது

புதுச்சேரி: பாகூரை சேர்ந்தவர் மலர்கொடி, 55. இவர், கடந்த நவம்பர் 27ம் தேதி கடலுாரில் இருந்து சிகிச்சைக்காக ஜிப்மருக்கு பஸ்சில் வந்தபோது, அதே பஸ்சில் வந்த பெண் ஒருவர், அவரின் கவனத்தை திசைத் திருப்பி மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.இதேபோல், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திராவை சேர்ந்த பேபி துர்கா பவானி, 29; என்பவர், கடந்த நவம்பர் 29ம் தேதி ராஜிவ் ந்திப்பில் இருந்து டெம்போவில் சென்றபோது, அவரின் அருகே அமர்ந்த பெண் ஒருவர் 3 சவரன் நகையை திருடிச் சென்றார்.புகாரின் பேரில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.அதில், திருப்பத்துார் மாவட்டம், பாச்சல் பிரிச்சி, ஆசாரி நகரை சேர்ந்த சோலையம்மா, 32; என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை