உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமெரிக்காவில் வேலை என கூறி பெண்ணிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி

அமெரிக்காவில் வேலை என கூறி பெண்ணிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பெண்கள் உட்பட 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.16 லட்சம் இழந்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் யு.எஸ்.ஏ.,வில் வேலை வாய்ப்பு இருப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் இருந்த மொபைல் எ ண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர், வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக, விசா செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பிய, அப்பெண் 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த பெண் 35 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 28 ஆயிரத்து 500, உறுவையாறைச் சேர்ந்தவர் 7 ஆயிரத்து 420, திருபுவனையை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 500, டி-நகரை சேர்ந்தவர் 10 ஆயிரத்து 600, என, மொத்தம் 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 320 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை