உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளிநாடு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

வெளிநாடு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 பேர் 3.96 லட்சத்தை இழந்துள்ளனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டை, மகாவீர் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சத்யா. சென்னையில் உள்ள கன்சல்டன்சி மூலம் வெளிநாட்டு வேலை தேடி வந்தார். இதற்கிடையே, சத்யாவை தொடர்பு கொண்ட மர்ம நபர், அல்பேனியா நாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு விசா எடுக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பிய சத்யா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து, லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். இதையடுத்து, கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்ட நபர், லாட்டரி ஏஜெண்ட் பேசுவதாக கூறி, தங்கள் வாங்கி லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், லாட்டரி பரிசு பணத்தை எடுக்க ஜி.எஸ்.டி., மற்றும் டிபாசிட் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதைநம்பி கல்யாணசுந்தரம் மர்மநபருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.இதேபோல், பெரியகாலாப்பட்டு, சுனாமி குடியிருப்பை சேர்ந்த கலைசெல்வி 15 ஆயிரம், தொண்டமாநத்தம், அமீர்தா கார்டன் பகுதியை சேர்ந்த மணிகண்டன் 59 ஆயிரத்து 500, லாஸ்பேட்டை, மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் 50 ஆயிரம், புதுப்பேட் பகுதியை சேர்ந்த பிரவீன் 2,000 என மொத்தம் 6 பேர் 3 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாயை மோசடி கும்பலிடம் இழுந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி