உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனிமை துயரத்தில் பெண் தற்கொலை

தனிமை துயரத்தில் பெண் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் தனிமையில் தவித்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், நெடுங்காடு, நல்லாத்தூர் சாலையை சேர்ந்தவர் சரளா,50. கூலி தொழிலாளி. இவரது கணவர் குணசேகரன் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களின் ஒரே மகனும், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே, மாயமானார். இதனால் தனிமையில் தவித்து வந்தார். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ