உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஷப்பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

விஷப்பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் இறால் பிடிக்க சென்றபோது விஷப்பூச்சி கடித்து பெண் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.காரைக்கால் நிரவி கீழஓடுதுறை பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி உதயகுமாரி 50 இவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.கடந்த 30ம் தேதி கருக்களாச்சேரி சுனாமி குடியிருப்பு வயல்வெளிக்கு இறால் பிடிக்கசென்றுள்ளார். அப்போது இறால் பிடிக்கும் போது விஷப்பூச்சி கடித்து மயங்கிவிழுந்த உதயகுமாரியை அவரது உறவினர்கள் அரசு மருந்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருந்துவனையில் சிகிச்சையில் இருந்த உதயகுமாரி நேற்று முன்தினம் உயிழந்தார்.இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ