உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டர் மோதிய பெண் படுகாயம்

ஸ்கூட்டர் மோதிய பெண் படுகாயம்

பாகூர்: ஸ்கூட்டர்கள் மோதியதில் பெண் படுகாயமடைந்தார். முத்தியால்பேட்டை எழில் நகரை சேர்ந்தவர் ஸ்ரீ நரேன்கிஷோர் 21; இவர், கடந்த 8ம் தேதி தனது தாய் சசிகால 44; என்பவருடன் ஸ்கூட்டரில் தவளக்குப்பம் லலிதா நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மற்றோர் ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர், இவர்கள் வந்த ஸ்கூட்டர் மீது மோதினார். இதில், தாய், மகன் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இருவரையும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சசிகாலவிற்கு, நெற்றியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது அறிந்து சிகிச்சை அளித்த வருகின்றனர். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை