உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பட்டறை

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பட்டறை

புதுச்சேரி:அதேகொம் பின்னகம் சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை வில்லியனுாரில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சீனு பெருமாள் தலைமை தாங்கினார். அறங்காவலர் நந்தினி முன்னிலை வகித்தார். பயிற்சி பட்டறையில் புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப்பணி துறையின் பேராசிரியர் நளினி கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சட்ட அறிவும், சமூகப் பொறுப்பும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என, பேசினார். இதில், 7 மாவட்டங்களை சேர்ந்த அதேகொம் பின்னகம் பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அதேகொம் பின்னகம் ஆர்த்தி, டெல்பின், சஞ்சு, மொஹ்மத் உஸ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை