உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அபிஷேகப்பாக்கம் சாலையில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் பெண்கள் அச்சம்

அபிஷேகப்பாக்கம் சாலையில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் பெண்கள் அச்சம்

அரியாங்குப்பம் ; ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடப்பதால், அவ்வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். .அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட, மணவெளி தொகுதி அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு ஆண்டாக எரியாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம், டி.என்.,பாளையம், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவ்வழியாக சென்று வருகின்றனர்.தவளக்குப்பத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் மட்டுமே தெரு விளக்கு உள்ளது. அதன் பின்னர் தெரு விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது. மது குடிப்பவர்கள் இருட்டாக உள்ள தெப்பக்குளம் பகுதியில், அமர்ந்து மது குடித்து வருவதால், ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ள பகுதி வழியாக பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் மின்துறையில் புகார் தெரிவித்தால், அவர்கள் பொதுப்பணித்துறைதான் சீர் செய்யவேண்டும் என கூறுகின்றனர். மின்துறை மூலம், அங்கு தெரு விளக்கு அமைக்க தொகுதி எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ