உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறக்கட்டளையில் இணைந்தவர்களுக்கு கட்சியில் இணைந்ததாக எஸ்.எம்.எஸ்., முத்தியால்பேட்டையில் பெண்கள் குமுறல்

அறக்கட்டளையில் இணைந்தவர்களுக்கு கட்சியில் இணைந்ததாக எஸ்.எம்.எஸ்., முத்தியால்பேட்டையில் பெண்கள் குமுறல்

புதுச்சேரி: அறக்கட்டளையில் இணைந்தவர்களுக்கு கட்சியில் இணைந்ததாக எஸ்.எம்.எஸ்., வந்ததால் முத்தியால்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.முத்தியால்பேட்டை அகஸ்தியர் வீதியில் சில தினங்களுக்கு முன் சிலர் பொதுமக்களை சந்தித்தனர். தாங்கள் புதிய அறக்கட்டளை துவங்க உள்ளோம். அதில் நீங்கள் சேர்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பரிசுகள் தானாக வீடு தேடி வந்துவிடும்.நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். அப்புறம் நாங்க கேட்கும்போது உங்களுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை தர வேண்டும் என்றனர்.ஏராளமான பரிசு பொருட்கள் கிடைக்கும் என்ற ஆசையில் 30 பேர் தங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்தனர். தொடர்ந்து அறக்கட்டளையினர் பொதுமக்களின் ஓ.டி.பி., எண்ணையும் வாங்கி சென்றனர். இதற்கிடையில் மொபைல் எண்னை தந்த 30 பேருக்கும், ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில் குறிப்பிட்ட கட்சியில் (பா.ஜ.,) நீங்கள் இணைந்து விட்டீர்கள்; வாழ்த்துகள் என, தகவல் வந்தது. அதை கண்டதும் நேற்று அப்பகுதிமக்கள் கொந்தளித்தனர். சாலையில் திரண்ட அவர்கள், எங்களுக்கு தெரியாமலேயே எங்களை கட்சியில் இணைப்பதா. இது சீட்டிங்... இதனால் எங்கள் வீட்டில் எவ்வளவு பிரச்னை தெரியுமா என, சாபம் விட்டப்படி, ஒட்டுமொத்தமாக புலம்பி தள்ளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ