உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

மகளிர் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

புதுச்சேரி:புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை, மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி துவக்கி வைத்தார். உறுப்பினர் செயலர் அமலோற்பவமேரி, உறுப்பினர்கள் சுஜாதா, சந்திரா, அன்பரசி, மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர். புதுச்சேரி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை