மேலும் செய்திகள்
காங்., நலத்திட்ட உதவி வழங்கல்
23-Feb-2026
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் மகளிர் காங்., சார்பில் மகளிர் தின ஆலோசனைக் கூட்டம், வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில், மாநில மகளிர் அணி தலைவி நிஷா, மாநில செயலாளர் ராஜாராம், மனோகர், முரளி, மோகன சுந்தரம் , செந்தில்குமாரன், சித்தானந்தம், தமிழ்செல்வம், சார்லஸ், சதீஷ், விநோலாமேரி, விஜயா, அமுதவல்லி ரேவதி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
23-Feb-2026