மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
17-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கே.வி.டெக்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பெண்களின் சம உரிமை, கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் துவங்கிய ஊர்வலம் கே.வி.டெக்ஸ் வரை நடந்தது. ஊர்வலத்தில் இந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள், 'பெண்கள் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சி, பெண்களுக்கு சமத்துவம் வேண்டும், பெண்களை மதிப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதே போன்று, கடலுார் அண்ணாபாலம் சிக்னல் அருகில் ஊர்வலம் துவங்கி கே.வி.டெக்ஸ் வரை நடந்தது.
17-Feb-2026