உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

 கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் கடன் பிரச்னையால் கூலி தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால் மெஜெஸ்டிக் காலனி பகுதியை சேர்ந்தவர் ஹபிபு ராஜா, 45; கூலி தொழிலாளி. இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வெளிநாடு சென்ற ஹபிபு ராஜா, அங்கு வேலை கஷ்டமாக இருப்பதாக கூறி, சொந்த ஊர் திரும்பி வந்தார். இதனால் கடன் சுமை அதிகரித்ததால் மன வேதனையில் இருந்த ஹபிபு ராஜா நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ