உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு

புதுச்சேரி: சிதம்பரம், தில்லைவிடங்கள், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி. இவரது மகன் சிபிராஜ், 20; இருவரும் மறைமலையடிகள் சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் உள்ள தனியார் பிரியாணி கடையில் வேலை செய்தனர்.கடந்த ஒரு வாரமாக சிபிராஜ் அதிக நேரம் மொபைல்போன் பேசிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டல் கழிப்பறைக்கு சென்று திரும்பிய சிபிராஜ் மயக்கமாக இருப்பதாக கூறி அமர்ந்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.கழிப்பறையில் சென்று பார்த்தபோது, ஓட்டலில் அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை சிபிராஜ் குடித்தது தெரியவந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சிறிது நேரத்தில் சிபிராஜ் உயிரிழந்தார்.உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சிபிராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை