மேலும் செய்திகள்
மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் உயிரிழப்பு
04-Jan-2026
புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 22; கூலி தொழிலாளி. இவர், கடந்த டிசம்பர் 10ம் தேதி அவரது நண்பரான அசோக்குமார் அழைப்பின் பேரில், லால்பேட்டை, இ.சி.ஆர்., எம்.ஜி.ஆர்., ரெசிடென்சியில் அமைந்துள்ள ஜாஸ் மொபைல் ஷாப் பெயர் பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் இறந்தார். அவரது தந்தை பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் மொபைல் ஷாப் உரிமையாளர் அசோக் குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Jan-2026