உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

காரைக்கால் : காரைக்காலில் குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரைக்கால், நிரவி, கீழ ஓடுதுறை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 49; கூலி தொழிலாளி. ஆரோக்கியசாமி தினமும் மது குடிப்பது வழக்கம். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக பேசுவதில்லை. மனவேதனையில் ஆரோக்கியசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் குடிபோதையில் ஆரோக்கியசாமி நிரவி போக்குவரத்து காவல்நிலையம் பின்புறத்தில் உள்ள முல்லையாற்றில் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !