உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வலிப்பு நோயால் தொழிலாளி சாவு

 வலிப்பு நோயால் தொழிலாளி சாவு

அரியாங்குப்பம்: தனியார் மருத்துவமனையில் பணி புரிந்த தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு இறந்தார். அபிேஷகப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் லோகநாதன், 38; பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனை தொழிலாளி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால், ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், அவரது மனைவி கோபித்து கொண்டு, அவரது தாய் வீடான விழுப்புரத்தில் சென்று தங்கினார். கடந்த 3ம் தேதி வீட்டில் படுத்திருந்த லோகநாதன் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ