மேலும் செய்திகள்
நெஞ்சு வலியால் வாலிபர் சாவு
16-Oct-2024
பாகூர்: பாகூர் அடுத்த கந்தன் பேட் பால்வாடி வீதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 56; கூலி தொழிலாளி. இவர் புதிதாக வீடு கட்டி வந்தார்.நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்த நிலையில், புதிதாக கட்டி வந்த வீட்டில் மின் விளக்கை நிறுத்துவதற்காக சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.கனகராஜ் சென்று வெகு நேரமாகியும் காணாததால் அவர் உறவினர்கள் புதிய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு மயங்கி கிடந்த கனகராஜை மீட்டு, கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து அவரது மனைவி முல்லை அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
16-Oct-2024