உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

பாகூர்: டிப்பர் லாரி மோதிய விபத்தில், சாலையை கடக்க முயன்ற கூலி தொழிலாளி உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், வடக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் முத்தையன் 60; கரும்பு வெட்டு கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2ம் தேதி காலை சொந்த வேலையாக முள்ளோடைக்கு வந்தார். அங்குள்ள பாண்லே பூத் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டிப்பர் லாரி அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து முத்தையன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர் இருதயநாதன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை