உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் பயிலரங்கு

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் பயிலரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, நோக்கியா நிறுவனம் இணைந்து சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் நடைமுறை பயன்பாடுகள் என்ற தலைப்பில் 2நாள் தேசிய பயிலரங்கு கருத்தரங்கம் நடந்தது. கணிப்பொறி துறை தலைவர் இளவரசன் வரவேற்றார். பயிற்சி பட்டறையை பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் துவக்கி வைத்து பேசுகையில், 'படித்தவர் படிக்காதவர், பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் இன்றைய சூழ்நிலையில் அனைவரும் இணைய வழி குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பீடுகள் நடைபெறுவதால் அத்தகைய குற்றங்களை தடுக்க உதவும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் நன்கு அறிந்து இந்த சமுதாயத்திற்கு உதவ முன்வர வேண்டும்' என்றார். பயிலரங்கில், பல்கலைக்கழகத்தின் கல்வி, திட்டம் மற்றும் மேம்பாடு இயக்குநர்கள் விவேகானந்தன், செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர்கள் ஷாலினி, தேன்மொழி நோக்கவுரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களாக நோக்கியா நிறுவன அதிகாரிகள் நவநீத நாராயணன், டார்னிஸ், அனுஸ்ரீ மற்றும் கணேஷ் ஆகியோர் பட்டறையில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கங்களை வழங்கினர். பயிலரங்கில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ