உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக சதுரங்க போட்டி சாம்பியன்; முதல்வர் வாழ்த்து

உலக சதுரங்க போட்டி சாம்பியன்; முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி: உலக சதுரங்க போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற தமிழ கத்தை சேர்ந்த வீரரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.சிங்கப்பூரில் உலக சதுரங்கப் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் பங்கேற்று சாம்பி யன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வயதில் இந்த பட்டத்தைப் பெற்றது தமிழர்களை பெருமிதம் அடையச் செய்துள்ளது. இச்சாதனை இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கவும், சாதனை படைக்கும் உத்வேகத்தை ஊக்குவிக்கும். சதுரங்கப் போட்டி வரலாற்றில் தனது பெயரையும், இந்தியாவின் பெயரையும் பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ள குகேஷ் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMESH KUMAR NAMACHIVAYAM
டிச 13, 2024 09:41

வாழ்த்துக்கள் குகேஷ் தாங்கள் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம்


RAMESH KUMAR NAMACHIVAYAM
டிச 13, 2024 09:40

வாழ்த்துக்கள் குகேஷ் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை