உலக சுற்றுச்சூழல் தின விழா; கவர்னர், முதல்வர் பங்கேற்பு
புதுச்சேரி; புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகளும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அரசு துறைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விருதுகளு வழங்கினர். தொடர்ந்து தாயின் பெயரில் ஓர் மரம் 2.0 இயக்கத்தை துவக்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினர்.விழாவில், சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமைச் செயலர் சரத் சவுகான், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலர் ஆஷிஷ் மாதவராவ் மோரே, சிறப்பு செயலர் யாசம்லட்சுமி நாராயணா ரெட்டி, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.