உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் உலக உறுப்பு தான தினம்

ஜிப்மரில் உலக உறுப்பு தான தினம்

புதுச்சேரி: ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பில் உலக உறுப்பு தான தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறை உதவிப் பேராசிரியர் சக்திவேல் பேசுகையில், இறுதி நிலை உறுப்பு செயலிழப்பால், பாதிக்கப்பட்ட கிடைக்கும் நோயாளிகளுக்கு உறுப்பு தானம் மூலம் மறுவாழ்வு, மூளை சாவு அடைந்தவர்களிடமிருந்து, உறுப்புகளை தானமாக பெறுவதற்கான மருத்துவ நடைமுறைகள் மற்றும் உறுப்பு தானம் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  உறுப்பு கொடையாளர்களுக்காக அமைக்கப்பட்ட உறுப்பு கொடையாளர் கவுரவச் சுவரை கூடுதல் மருத்துவக் கண்காணிப்பாளர் பெட்சிமாத்தாய், தலைமை செவிலிய அதிகாரி புஷ்பலதா ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சமீபத்தில், சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த ராஜன் என்பவரிடம் இருந்து பெறப்பட்ட, கல்லீரல் மூலம் மறு வாழ்வு பெறப்பட்டு, குணமடைந்து வரும், நோயாளியை டாக்டர் பெட்சி மாத்தாய் சந்திந்து, கலந்துரையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை