உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக சுற்றுலா தின மணல் சிற்பம் கண்காட்சி 

உலக சுற்றுலா தின மணல் சிற்பம் கண்காட்சி 

புதுச்சேரி: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா துறை, பாரதியார் பல்கலைக்கூடம் சார்பில் இரண்டு நாள் மணல் சிற்பங்கள் முகாம் பாண்டி மெரினா கடற்கரையில் நடந்தது. பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத் துறை தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில், 120 மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் கோபுரம், ஆயிமண்டபம் போன்ற புகழ் பெற்ற சுற்றுலா தலங்களையும், அரவிந்தர், அப்துல்கலாம் ஆகியோரின் உருவங்களையும் மணல் சிற்பங்களாக உருவாக்கினர். இந்த மணல் சிற்பங்கள் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏரா ளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வை யிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை