பிரியாணியில் புழு ; அதிகாரிகள் விசாரணை
புதுச்சேரி; பிரியாணியில் புழு குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் துருவை கிராமத்தை சேர்ந்தவர் குரு. வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர். இவர் புதுச்சேரி ராஜிவ்காந்தி சதுக்கம் அருகே உள்ள கடையில் நேற்று மதியம் குஸ்கா பிரியாணி ஒன்றை பார்சல் வாங்கிச்சென்றார். அந்த பிரியாணியை சாப்பிடும்போது அதில் ஒரு புழு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பார்சலுடன் பிரியாணி கடைக்கு வந்து விவரத்தை தெரிவித்தார். அதற்கு கடைக்காரர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகரில் உள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்று குரு புகார் அளித்தார். அதன்பேரில் உணவுப்பாதுகாப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.