மாநில அளவில் மல்யுத்த போட்டி
புதுச்சேரி: உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான மல்யுத்த போட்டியினை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் துவக்கி வைத்தார். புதுச்சேரி உப்பளம் ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 8வது மாநில அளவிலான மல்யுத்த போட்டி துவக்க விழா நடந்தது. புதுச்சேரி மல்யுத்த சங்க பொது செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்தார். இதில் புதுச்சேரி, காரைக்கால் , மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இணை இயக்குநர் ( ஓய்வு) ராஜகணேஷ், சிவரஞ்சனி, பொருளாளர் சோமசுந்தரம், தாமோதரன் செல்வம், ஜெயஸ்டு, வசந்த், அஸ்வினி, ஷாலினி , காமோஷ்வரன், நிதிஷ்குமார் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.