உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரத்துறை பணிக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

சுகாதாரத்துறை பணிக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி : சுகாதாரத்துறை பணிக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மகப்பேறு உதவியாளர், மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுனர், அறுவை சிகிச்சை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்விற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை உதவியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கான தேர்வுகள் 23ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை (முதல் தாள்), மதியம் 12:30 முதல் 2:30 மணி வரை (2ம் தாள்). மகப்பேறு உதவியாளர் பணிக்கான தேர்வு 23ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை (முதல் தாள்), மாலை 4:00 முதல் 6:00 மணி வரை (2ம் தாள்). மருந்தாளுநர் பணிக்கான தேர்வு 24ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை (முதல் தாள்), மாலை 4:00 முதல் 6:00 வரை (2-வது தாள்) . இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கான தேர்வு 24ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை (முதல் தாள்), 25ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை (2-ம் தாள்). அதேபோன்று, வருவாய் துறையில் உள்ள துணை தாசில்தார் பணிக்கான தேர்வு வரும் 31ம் தேதி நடக்கிறது. ஹால்டிக்கெட்டுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு http://recruitment.py.gov.in. என்ற இணையதளத்தை பார்க்கவும். இத்தகவலை புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !