மேலும் செய்திகள்
கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி
25-Mar-2025
புதுச்சேரி : கோழி வளர்க்க முன் அனுபவம் உள்ள அட்டவணை இனத்தவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், நிதி உதவியோடு, ராஞ்சி இந்திய உயிர் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புதுச்சேரி ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கோழி வளர்ப்பவர்களுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டமானது அட்டவணை இனத்தவர்களுக்கான சிறப்பு திட்டமாகும்.இந்த திட்டத்தில் பயன்பெற, முன் அனுபவம் உள்ள அட்டவணை இனத்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை எடுத்து வந்து முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9499047100 மொபைலில், அல்லது கால்நடை கல்லுாரி மருத்துவ விரிவாக்க துறை அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
25-Mar-2025