மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
14-Jul-2025
காரைக்கால் : காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக திருப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். திட்டச்சேரி வெள்ளதிடல் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்,32; எனத் தெரியவந்தது. இவர் மதுஅருந்திவிட்டு ஆபாசமாக பேசியதாக திருபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
14-Jul-2025