உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

காரைக்கால்: திருப்பட்டினம் ரயில் நிலையம் அருகில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். ரயில் நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், கீழையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 32, என, தெரியவந்தது. அவுர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை