உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரகளை வாலிபர் கைது 

 ரகளை வாலிபர் கைது 

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரையாம்புத்துார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மணமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தென்பெண்ணையாறு மே ம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டு ரகளையில் ஈடுபட் டு கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில்'' நெல்லிக்குப்பம் அடுத்த பெரிய சோழவல்லியை சேர்ந்த கலைச்செல்வன் 27; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை