மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு : வாலிபர் கைது
20-Jan-2026
நெட்டப்பாக்கம்: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலுார் மாவட்டம் ஏ.கே.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் 25, என்பவர் மது போதையில், மடுகரை-ராம்பாக்கம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
20-Jan-2026