உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்பனை வாலிபர் கைது

கஞ்சா விற்பனை வாலிபர் கைது

காரைக்கால், : காரைக்காலில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக நகர போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் டி.கே.நகர் ரயில்வே லைன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற நபரை மடக்கி, விசாரித்தனர்.அவர், டி.கே.நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த காதர்பாட்சா மகன் அப்துல் ரஹ்மான், 26, என்பதும், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி