உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

 கஞ்சா விற்பனை வாலிபர் கைது 

புதுச்சேரி: உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ் பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி ஸ்கூட்டரில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், அத்திச்சனுார், மாதா கோவில் வீதி பிரபு (எ) அப்பு, 30, என்பதும், அவரை சோதனை செய்த போது, 300 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கப் பதிந்து, பிரபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், ஒரு ஸ்கூட்டர், மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை